உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

நவம்பர் 19ல் உலகத்தில் நடக்க போகும் பேரழிவு..? – விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!!

நவம்பர் 19ம் தேதி உலகின் பல பகுதிகளுக்கு பூகோள ரீதியில் பெரும் அழிவு காத்திருப்பதாக அச்சுறுத்துகின்றனர் சில விஞ்ஞானிகள்.

‘பிளானட் எக்ஸ்’ இதுதான் கிறிஸ்தவ எண்ணியல் நிபுணர் டேவிட் மியாடே, சில வானியல் நிபுணர்கள் நிபிரு என்ற கோளுக்கு வைத்துள்ள பெயர்.

இதுதான் இத்தனை திகில்களுக்கும் காரணமான கோள் இந்த கோள், அடுத்த மாதத்தில் உலகெங்கிலும் பெரிய பூகோள அழிவுகளுக்கு காரணமாக இருக்கப்போவதாக இவர்கள் கூறுகிறார்கள்.


எரிமலை
சமீபத்தில் நடைபெற்ற எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கங்களுக்கு நிபிருதான் காரணம் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள். ஆனால் இனிதான் பெரும் பாதிப்புகள் ஏற்படுத்தப்போவதாக அவர்கள் கூறுவதுதான் இதில் திகிலூட்டும் சமாச்சாரம்.

அழிவுகள் அதிகரிப்பு
நவம்பர் 19ம் தேதி, இந்த நிபிரு கோள் தாக்கம், பூமியில் அதிகரிக்கும். இதன்பிறகு டிசம்பர் வரை இந்த தாக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதனால் பூமியில் பல்வேறு அழிவுகள் ஏற்படும் என்று கூறியுள்ளார் எழுத்தாளர் டெர்ரல் க்ரோப்ட். இவரது கருத்தை தொடர்ந்து பீதி அதிகரித்துள்ளது.


இந்தோனேஷியாவில் நில நடுக்கம்
சூரியனுக்கு பின்னால் பூமி செல்லும்போது, நிபிரு கோளின் தொடர்பு ஏற்படும். இதனால் நவம்பர் 19ம் தேதி இந்தோனேஷியாவில் பெரும் பூகம்பங்கள் ஏற்படலாம்.

இதனால் சுனாமி ஏற்படலாம். இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் புதிய எரிமலை சீற்றம், நில நடுக்கம் போன்றவற்றை இந்த கோள் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என்று க்ரோப்ட் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து எச்சரிக்கை
சுமேரியாவிலுள்ள ஜோதிடர்கள் நிபிரு கோளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். இந்த கோள் 3600 வருடங்களுக்கு ஒருமுறை, பூமிக்கு அருகே செல்வது வழக்கம் என்பது அவர்களின் ஜோதிட கணிப்பு.

முதலில் செப்டம்பர் 23ம் தேதியும், பிறகு, அக்டோபர் 15ம் தேதியும் பூமிக்கு ஆபத்து ஏற்பட இருப்பதாக சில எண்ணியல் நிபுணர்கள் கணித்திருந்தனர். இப்போது நவம்பர் 19ம் தேதியை நோக்கி அவர்கள் பார்வை நகர்ந்துள்ளது.


நாசா மறுப்பு
அதேநேரம், நாசா இதை மறுத்துள்ளது. நிபிரு என்ற கோள் இல்லவே இல்லை என்பது நாசா வாதம். மற்றொரு கோள் பூமி மீது மோதுவதால் அழிவு ஏற்படும் என்று பலரும் கூறுகிறார்கள்.

ஆனால் நிபிரு என்ற கோள் இருப்பதே கேள்விக்குறி எனும்போது, மோதலுக்கு ஏது வாய்ப்பு. நிபிரு குறித்த கருத்து வெகுகாலமாக உள்ளது. காலத்திற்கு ஏற்ப அது மாற்றிச் சொல்லப்படுகிறது. இவ்வாறு நாசா கூறியுள்ளது.