உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

யாழ்ப்பாணம் நோக்கி பயணமான பேரூந்து புத்தளத்தில் பயங்கர விபத்து!! 5ற்கும் மேற்பட்டோர் பலி!!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, புத்தளம், மதுரங்குளிப் பகுதியில், இன்று காலை 8.15 மணியளவில் விபத்துக்குள்ளானதில், குறைந்தது 5 பேர் பலியானதோடு, 45 பேர் காயமடைந்தனர்.அதிக வேகத்துடன் பயணித்த காரணத்தாலேயே, இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

இரண்டாம் இணைப்பு

புத்தளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறித்த விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை காயமடைந்தவர்கள் புத்தளம் மற்றும் முந்தல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி முந்தல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.