உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

விடிய..விடிய...7 இலட்சத்துக்கு குடித்தும் போதையே ஏறல.... ஹோட்டல் மீது வழக்கு

லண்டனில் 7 இலட்சத்துக்கு மது குடித்தும் போதை ஏறவில்லை என ஹோட்டல் மீது எழுத்தாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

லண்டனின் வால்தாஸ் ஆம் ஸீ காஸ்லியான மது வகைகளுக்கு மிகவும் பிரபலமா ஹோட்டல்.

இங்கு மிக குறைந்த மதுவே 2,00,000 அதிகமாக இருக்கும். இந்நிலையில் அந்த ஹோட்டலில் இருக்கும் விலை உயர்ந்த மதுவை ஒரு சீன எழுத்தாளர் வாங்கியுள்ளார்.

அதன் விலை 7 இலட்சமாகும். பணக்காரரான இவர் அந்த மது வகையை தேடி குடிக்க வேண்டும் என அங்கு வந்துள்ளார். இது கடந்த 1878ல் செய்யப்பட்ட பாரம்பரியமான மது. அதனால் தான் இதன் விலை இந்தளவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த எழுத்தாளர் மது மொத்தத்தையும் குடித்தும் அவருக்கு போதை ஏறாமல் இருந்ததாக தெரிகிறது. அதனால் தனக்கு போலியான மதுவை, அதிக விலைக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள் என புகார் அளித்துள்ளார்.

அவர் அந்த மதுவின் மீதியை சோதனையகத்தில் கொடுத்து சோதனை செய்ததில் அது போலியான மதுபானம் என உறுதியானது.

இதையயடுத்து அவர் அந்த ஹோட்டலின் மீது வழக்கு தொடர்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் ஹோட்டல் நிர்வாகம் அவர் பணத்தை திரும்பி அளிக்க திட்டமிட்டுள்ளது.