உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

யாழ் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு மழை தொடரும் என திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலையப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் குறிப்பிட்ட அவர்,

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்றும் இன்றுமாக மொத்தம் 79.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கனதியான முகில்களுடன் மழை தொடர வாய்ப்புள்ளது. வடக்கு மற்றும் வடகிழக்கு கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70-80 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரிக்கும் என்பதால் கடலுக்கு செல்பவர்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

இடி மின்னல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருப்பதுடன் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மக்கள் மேற்கோள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணக் குடா நாட்டில் இன்று அதிகாலை கனத்த இடி மின்னலுடன் தொடங்கிய மழை, இந்தச் செய்தி எழுதிக்கொண்டிருக்கும் இப்பொழுதுவரை ஓயாமல் பெய்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.