உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

உலக அழகி மானுஷி சில்லர் பற்றின சுவாரசிய தகவல்கள்

பதினேழு ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய பெண் ஒருவர் உலக அழகி பட்டம் வென்ற இந்தியாவிற்க்கு பெருமை சேர்த்தவர் மானுஷி சில்லர். இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இவரை பற்றி சில சுவாரசியமான சில விடயங்கள்....

மானுஷி சில்லர்ருக்கு வயது இப்போது தான் 20.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இவர் மருத்துவக் கல்வி பயின்று வருகிறார்.
டெல்லியில் உள்ள St Thomas பள்ளியில் கல்வி பயின்ற இவர் 12 வகுப்பில் ஆங்கிலத்தில் முதல் இடம் எடுத்துள்ளார்.

தற்போது இவர் Bhagat Phool Singh மருத்துவ கல்லுரியில் பருத்துவம் பயின்று வருகிறார்.
இதய அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பது இவரது லட்சியம்.

மானுஷி சில்லர் மிஸ் இந்தியா பட்டம் வென்றபிறகு, உலக அழகிப் பட்டத்திற்கு தயாரானார்.
மானுஷி முறையாக குச்சிப்புடி நடனம் பயின்றவர். ஜிம்மில் பயிற்சி செய்வது இவருக்கு மிகவும் பிடித்தமானதாம்.

இவர் விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவர். ஆழ்கடல் நீச்சல் (ஸ்கூபா டைவிங்), பாராகிளைடிங் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்கிறார்.

கிராமப்புறங்களில் லாப நோக்கமல்லாத மருத்துவமனைகளை திறக்க மானுஷி சில்லர் விரும்புவதாக மிஸ் வேர்ல்டு வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இவரின் சாதனைக்கு பாராட்டுக்கள்.