உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

கனடாவில் டைனோசர் போன்ற மிகப்பெரிய பறவை இனம் கண்டுபிடிப்பு…!!

டைனோசர் போன்ற மிகப்பெரிய பறவை இனம் சுமார் 71 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக கனடா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரும் உயிரினமாக கருதப்படும் டைனோசரின் எலும்புகளும், முட்டைகளும் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டைனோசர்கள் போன்றே பெரிய உருவ அமைப்பு கொண்ட பறவை இனம் வாழ்ந்துள்ளதை கனடா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கனடாவின் ரெட் டீர் பள்ளத்தாக்கு பகுதியில் பெரிய எலும்புக்கூடு ஒன்றை கனடாவைச் சேர்ந்த தொல்லுயிரியலாளர் ஒருவர் கண்டுபிடித்திருக்கிறார். முதலில் கிடைக்கபெற்ற எலும்புகளின் அளவைக்கொண்டு இது டைசோனர் போன்ற பெரிய உருவ அமைப்பு உடைய புத்திசாலி பறவையாக கருதப்படும் “ட்ரோடான்” வகை பறவை என்றுதான் முதலில் இது கருதப்பட்டுள்ளது . ஆனால் அதன் மண்டை ஓட்டு எலும்புகள் ட்ரோடானை விட சிறிய அளவில் இருந்ததை தொடர்ந்து இது ட்ரோடான் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு பறவை என்பதை கண்டுபிடித்திருக்கிறார்.

இது உருவ அளவில் டைனோசர் போன்று இருந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.இந்த பறவை இனம் தோரயமாக 3 அடியிலிருத்து 5 அடிவரையிலான உயரத்தில் இருந்திருக்கலாம் எனவும் மேலும் இதன் எடை சுமார் 4.5 டன்கள் இருந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த பறவை இனம் சுமார் 71 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த பறவையின் எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்ட ரெட் டீர் பகுதியின் பண்டைய பெயரான அல்பர்டா என்ற பெயரையும் புகழ் பெற்ற தொல்லுயிரியாலாளர் கியூரி பெயரையும் இணைத்து இந்த பறவை இனத்திற்கு “கியூரி அல்பர்டா கன்டர்” என பெயரிடப்பட்டுள்ளது.