உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

புகையிரதம் தடம்புரண்டதால், வடக்கு மார்க்கத்திலான போக்குவரத்து பாதிப்பு

பரசன்கஸ்வெவ - மதவாச்சிக்கு இடையிலான  புகையிரத பாதையில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டதால்,  வடக்கு மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 08.45 அளவில் ரஜரட்ட ரெஜின என்ற புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக, ரயில்வே தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதனால் இன்று காலை 05.10க்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருத்த புகையிரத சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், மதவாச்சியில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருந்த புகையிரத சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 05.45க்கு கல்கிசையில் இருந்தும் 08.50க்கு கொழும்பு - கோட்டையில் இருந்தும் யாழ் நோக்கிச் செல்லும் புகையிரதங்களும் அனுராதபுரம் வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.