உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

பத்து வயது சிறுமிக்கு செய்த கொடுரம்;சித்தியும் சிறுமியின் மைத்துனரும் கைது!

ஹற்றன் பொகவந்தலாவ போனோகோட் தோட்டத்தில் பத்துவயது சிறுமியை தாக்கி துன்புறுத்திய சித்தியையும் சிறுமியின் மைத்துனரையும் இன்று பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்ததுடன் சிறுமியையும் பொலிஸார் மிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

தர்மராஜ் சர்மிலா எனும் பத்துவயது சிறுமியின் தாயும் தந்தையும் வெளியூரில் தொழில் புரிவதால் சிறுமி சித்தியான மஞ்சுலாவுடன் வசித்தார்.

சிறுமியின் சித்தியான மஞ்சுலா சிறுமியை வீட்டு வேலைக்காரியாக நடத்தியதை அறிந்த மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்துச் சிறுமியின் சித்தியையும் மைத்துனரையும் பொலிஸார் கைது செய்தனர்.

சிறுமியின் உடம்பில் காயங்கள் காணப்படுவதால் சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்காக டிக்கோயா  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.