உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

பிரபல பாடசாலை மாணவிகளின் மோசமான செயல்: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

சப்ரகமுவ மாகாணத்தின் பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவிகள், அண்மையில் மாணவரொருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக முறைப்பாடொன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுறுத்தலுக்கு உள்ளான மாணவரே கேகாலை பொலிஸ் நிலையத்தில் குறித்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அச்சுறுத்தல் விடுத்துள்ள நான்கு மாணவிகளினதும் தோழியொருவர், ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளான மாணவரை காதலித்து வந்துள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பு இருவரது உறவிலும் விரிசல் வந்துள்ளது.

இந்த நிலையில் மனமுடைந்த தோழி பாடசாலைக்கு சமூகமளிக்காத நிலையில், இதற்கான காரணத்தை அந்த நான்கு மாணவிகள் அறிந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நான்கு மாணவிகளும் இணைந்து மாணவரின் வீட்டை தேடிச் சென்று அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், அந்த மாணவர் குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

முறைப்பாட்டை ஆராய்ந்த பொலிஸார் இதனுடன் தொடர்புடைய மாணவர்களை அழைத்து அவர்களை சமாதானப்படுத்தி வழக்குகள் எதுவும் பதிவு செய்யாது திருப்பியனுப்பியுள்ளனர்.