உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

செயற்கைக் கோள் காட்டிய மெல்லிய கோட்டால் தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் ஆய்வாளர்கள்…!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சுற்றி பல கோயில்கள் உள்ளன. ஏறக்குறைய எல்லாமே, ராமாயணத்துடன் தொடர்புடையதாகவே, அவை எல்லாம் அமைந்திருக்கின்றன. ராமநாதபுரத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் தெற்கே உள்ளது சேதுக்கரை.

இந்தக் கடலில் இருந்து 2 கி.மீ. தூரம் சென்றால், கால்கள் நிற்கும் அளவிற்கு கடல் தண்ணீர் இருக்கும். அதன் கீழே கடல் பாறைகளால் அமைந்த அரண் போன்றதொரு பாலம் இருக்கிறது.

நமது தார்ச்சாலை அளவில் கடலின் அடியிலிருந்து மேல் மட்டம் வரை இந்தப் பாலம் அமைந்திருக்கிறது. இந்தப் பாலம் இலங்கையில் உள்ள தலைமன்னார் வரை செல்கிறது.

இதைத் தான் ராமர் சீதையை மீட்பதற்காக, தனது பரிவாரங்களுடன் இலங்கைக்கு செல்ல உருவாக்கிய பாலம் என்று சொல்லப் படுகிறது. சேது என்றால் வட மொழியில் அணை என்று பொருள். வைணவர்கள் இந்த சேதுவை, “திரு அணை” என்று அழைக்கிறார்கள்.

இந்த சேதுப்பாலம் அமைந்துள்ள கடற்கரையைத் தான் தற்போது, சேதுக்கரை என்றழைக்கிறார்கள். கடற்கரையில், தெற்கு திசையை நோக்கி ஆஞ்சநேயர் வணங்கி நிற்பது போல, சிலையும், அதனைச் சுற்றி கோயிலும் உள்ளது.
சீதையை மீட்க ராமர் ஆஞ்சநேயர் மற்றும் அவரது வானரப் படையினரும் தான், கடலின் நடுவே சாலை போன்ற பாலம் அமைத்து தந்திருக்கிறார்கள். இலங்கைக்கு இந்தக் கடல் பாலம் வழியாகச் சென்று, பின் ராவணனை வென்று, மீண்டும் இந்த வழியாகத் தான் ராமர் சீதையை மீட்டு வந்ததாகச் சொல்கிறார்கள்.

“அணையில் சூழ்கடல் அன்றடைத்து வழி செய்வதவன்” என்று, சேதுக்கரையின் புகழைப் பற்றி கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் கூறியுள்ளார்.

மற்றொரு சமயக் குரவரான திருநாவுக்கரசர், “கடலிடை மலைகள் தம்மால் அடைந்த மால்களும் முற்றி” என்று தமது தேவாரப் பாடல்களில் குறிப்பிடுகிறார். இங்கிருக்கும் பலரும் இந்தச் சேதுக்கரையைச் சென்று பார்த்து வந்திருக்கிறார்கள்.

மேலும், இந்த சேதுப் பாலத்தில் நின்று பகவானைப் பிரார்த்திப்பது முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்! அதனால் தான், காசி ராமேஸ்வரம் என தீர்த்த யாத்திரை வருபவர்கள், ராமேஸ்வரம் வந்து, பின்னர் கடைசியாக இந்த சேதுக் கரைக்கு வந்து தங்களது யாத்திரையை நிறைவு செய்கிறார்கள்.

செயற்கைக் கோள் காட்டும் படத்தில், இந்தப் பாலம் ஒரு மெல்லிய கோடு போல் காட்டி, சேதுக்கரையையும், இலங்கைப் பகுதியையும் இணைப்பதைக் காணலாம். சேதுக்கரையில் உள்ள மீனவர்களிடம் இந்தப் பாலத்தைப் பற்றிக் கேட்ட போது, “முன்பெல்லாம், இதற்காகவே படகு சவாரி செய்ய யாத்ரீகர்கள் அடிக்கடி வருவார்கள்.

நாங்களும், அவர்ளை அந்தப் பாலம் இருக்குமிடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு அவர்களை நின்று வழிபடச் செய்து விட்டு, பின் படகில் கூட்டி வந்து விடுவோம்”. இப்போது, இங்கே சேதுப்பாலம் திட்டம் பற்றிய பேச்சு துவங்கியதிலிருந்து, யாரும், அங்கே நின்று பூஜை செய்ய அனுமதிப்பதில்லை.

ஆனால், அவர்கள் அனு தினமும், மீன் பிடிப்பதற்காகச் செல்லும் போது, அந்தப் பாலத்தை பார்த்த பின்பே செல்வதாகவும், அப்போது தான் மீன்கள் அதிகம் கிடைக்கிறது, என்றும் கூறுகிறார்கள். சேது சமுத்திரத் திட்டத்தில், ராம சேதுவை சேதப் படுத்துவதில்லை என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதா?

என மத்திய அரசிடம் உச்ச நீதி மன்றம் கேள்வி கேட்டு, அதற்கான விளக்கத்தையும் தர உத்தரவிட்டிருக்கிறது. சேது சமுத்திரக் கால்வாய் அமைப்பதற்கான திட்டத்தை, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கொண்டு வந்தது.
இத் திட்டத்திற்காக, ராமர் பாலத்தை சேதப் படுத்தாமல், கடலை ஆழப்படுத்தும் செயலைச் செய்ய வேண்டும் என்றும், ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

இதனை ஆய்வு செய்த, டாக்டர். பச்சேரி தலைமையிலான குழு, சேதுக் கால்வாய் அமைப்பதற்கு, சேதுப்பாலத்தை சேதப் படுத்தினால் தான் கால்வாய் அமைக்க முடியும் என்று அறிக்கையை வெளியிட்டது.

ஆனால், தற்போதுள்ள பா.ஜ.க. அரசு, இந்தப் பாலத்தை சேதப்படுத்த விரும்பவில்லை. ஆனாலும், இந்த திட்டத்தை மாற்று வழியில் எப்படி செயல்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறது.

இன்னமும் டெம்போலா எனப்படும் மணல் திட்டுகளை பற்றி ஆராய்ச்சி செய்யும் கடலடி ஆய்வாளர்களுக்கு தமிழகம் ஒரு புரியாத புதிராகவே உள்ளது. கடலில் இயற்கையாக உருவாகும் மணல் திட்டுகள் டெம்போலா என்று அழைக்கப்படும். தமிழகத்தில் இருக்கும் சேது பலமோ எப்படி இரு நிலப்பரப்புகளை இணைக்கும் அளவிற்கு உருவாகி இருக்க முடியும் என்று வியக்கின்றனர்.

செயற்கைக்கோள் படத்தை வைத்து ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட முன்வந்த போதும், கணக்கட்சிதமாக இலங்கையுடன் சென்று இணையும் மெல்லிய கோடு தென்படுகிறது. இதனை தொடர்ந்து பல ஆராய்ச்சியாளர்களும் தமிழகத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.