உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

கனடாவில், நிர்வாணத்துடன் கடத்தலில் ஈடுபட்ட குழு…!

கனடாவில் கைக்குழந்தை உள்ளிட்ட குடும்பம் ஒன்றை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்ற ஐந்து பேர் கொண்ட நிர்வாண குழுவினரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் பயணித்த கார், சாலையில் சென்ற லொறி ஒன்றுடன் மோதிய பின்னரே குறித்த கடத்தல் சம்பவம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, கனடாவின் லடுக் கன்றி (Laduc County) பகுதியில் இருந்து நேற்றுக் காலை, குறித்த நிர்வாணக் குழுவானது ஆறு வாரக் கைக்குழந்தை மற்றும் அதன் பெற்றோரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளது.

இதன்போது இவர்கள் சென்ற கார் சாலையில் லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்துக்குப் பொலிசார் வந்த பின்னர், கடத்தல் விவகாரம் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் விபத்துக்குள்ளாகி நின்ற காரில் இருந்து கைக்குழந்தையுடன் அந்த தாயார் தப்பிக்கவும், தொடர்ந்து அவரது தந்தையும் தப்பித்துள்ளார். இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பெண்கள், இரண்டு சிறுமிகள், மற்றும் ஆண் ஒருவரை கைது செய்த பொலிஸார், அவர்களில் 4 பேரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதில் மூன்று பேர் மீது ஆட்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ள பொலிசார், குறித்த 5 பேரும் ஏன் ஆடை இன்றி நிர்வாணமாக இருந்தனர் என்பது குறித்து விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என்று குறிப்பிட்டுள்ளனர்.