உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

கிளி­நொச்சியில் சுவாமி அறையில் குடும்பப் பெண்ணின் திருவிளையாடல்

வட்­டக்­கச்சி இரா­ம­நா­த­பு­ரம் பகு­தி­யில் மின்­சா­ரத்­தில் கசிப்பு உற்­பத்தி செய்த பெண்­ணைக் கைது செய்­துள்­ள­தாக கிளி­நொச்சி முல்­லைத்­தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதி­ப­ரின் சிறப்பு பிரி­வி­னர் தெரி வித்­த­னர்.

கிளி­நொச்சி மாவட்­டத்­தின் வட்­டக்­கச்சி இரா­ம­நா­த­ப­ரம் பகு­தி­யில் கசிப்பு உற்­பத்தி தொடர்­பாக பொலிஸா­ருக்குக் கிடைத்த இர­க­சிய தக வலை அடுத்து அங்கு சென்ற பொலி­சார் சாமி அறை­யில் நான்கு மின் சூடாக்­கி­க­ளைப் (கீற்­றர் களை) பயன்­ப­டுத்தி கசிப்பு உற்­பத்­தி­யல் ஈடு­பட்ட பெண்ணொ ருவ­ரைக் கைது செய்­துள்­ள­னர்.

அவ­ரி­டம் இருந்து 20 லீற்­றர் கசிப்­பும் 900 மில்லி லீற்­றர் கோடா­வும் கசிப்பு உற்­பத்தி உப­க­ர­ணங்­க­ளும் கைப்­பற்­றப்­பட்­டுள்ள தென­வும் கிளி­நொச்சி மாவட்­டத்­தில் மின்­சா­ரத்தை பயன்­ப­டுத்தி கசிப்பு உற்­பத்தி செய்­துள்ள முதல் வழக்­காக இது பதி­யப்­பட்­டுள்­ள­தென வும் பொலி­சார் தெரி விக்­கின்­ற­னர்.

மேல­திக விசா­ரணை மற்­றும் நீதி­மன்ற நடவ டிக்­கைக்­காக குறித்த பெண்ணை தரு­ம­ப­ரம் பொலிஸ் நிலை­யத்­தில் ஒப்­ப­டைத்­துள்­ள­தாக கிளி­நொச்சி முல்­லைத்­தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதி­பர் மகேஸ் வெலிக்­கன்ன வின் சிறப்பு பிரி­வி­னர் தெரி­வித்­த­னர்.