உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக ரிலீசான படத்தின் நாயகி நீக்கம்..!!

ஒரு படத்தின் ஹீரோயின் படப்பிடிப்புக்கு முன்போ, படப்பிடிப்பின் போதோ நீக்கப்படுவது வழக்கம். ஆனால் உலக சினிமா வரலாற்றில் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அந்த படம் ரிலீஸ் ஆன பின்னர் படத்தில் இருந்து ஒரு ஹீரோயின் நீக்கப்படும் முதல் கோமாளித்தனம் தற்போது தமிழ் சினிமாவில் அரங்கேறியுள்ளது.

சமீபத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் முதல் பாதி மொக்கையாக இருப்பதாகவும், இதற்கு காரணம் இந்த படத்தின் நாயகி வரும் மெஹ்ரினின் காதல் காட்சிகள் என்றும் விமர்சகர்கள் விமர்ச்சித்தனர். ஆனால் இந்த படத்தின் இரண்டாம் பாதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் இன்று மாலை இயக்குனர் சுசீந்திரன் அதிரடி முடிவு ஒன்றை எடுத்தார். முதல் பாதியில் நாயகி மெஹ்ரின் தோன்றும் காட்சிகள் அனைத்தையும் நீக்கிவிட்டு பத்திரிகையாளர்களுக்கு படத்தை போட்டு காட்டினார். பத்திரிகையாளர்களும் ஓகே சொன்னதால் நாளை முதல் இந்த படத்தின் 20 நிமிட ஹீரோயின் காட்சிகள் இல்லாமல் படம் திரையரங்குகளில் ஓடப்போகிறது. உலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக ரிலீசான படத்தின் ஹீரோயின் நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த செயலுக்காக தான் ஹீரோயினிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.