உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

யாழில் குமர்ப்பிள்ளையுடன் கம்பி நீட்டிய குருக்கள்!!

யாழில் உள்ள பிரபல கோவில் ஒன்றின் குருக்கள் இளம் யுவதி ஒருவருடன் தலைமறைவாகியுள்ளார். கோவிலுக்கு அடிக்கடி செல்லும் யுவதி ஒருவருடன் குருக்கள் காதல் கொண்டதாக தெரியவருகின்றது.

ஊர்மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகசபையின் பொறுப்பில் இருந்த குறித்த கோவிலில் யுவதியுடன் தலைமைறைவான குருக்களின் தந்தையார் பரம்பரை பரம்பரையாக பூசை செய்து வந்துள்ளார். இந் நிலையில் தனது மகனையும் மாலை நேரங்களில் கோவிலுக்கு  பூசை செய்ய அனுப்பியுள்ளார்.

அந் நேரங்களில் அங்கு கும்பிட வந்த கோவில் நிர்வாகசபை செயலாளரின் மகளுடன் குறித்த இளம் பூசகர் தலைமறைவாகியுள்ளார். நிர்வாகசபை செயலாளரின் மகள் இது தொடர்பாக தனது தந்தைக்கு தெரியப்படுத்தி தங்களைத் தேட வேண்டாம் என கூறியும் நிர்வாகசபை செயலாளரும் கோவில் பூசகரும் பொலிசாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்கள். இருந்தும் பொலிசார் அவர்களின் முறைப்பாட்டை ஏற்கவில்லை எனவும் இருவரும் வயதுக்கு வந்தவர்கள் என்பதால் குறித்த முறைப்பாட்டை ஏற்கவில்லை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து நிர்வாகசபை செயலாளர் கோவிலில் இருந்த நகைகளைக் காணவில்லை என பொய் முறைப்பாடு கொடுக்க முற்பட்ட போது ஊர்சனங்களால் அது தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது.