உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

கொழும்பு பேருந்தில் ஒருவரையொருவர் தாக்கிய காதலர்கள்! பயணிகள் நையப்புடைப்பு

ஓடிக்கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட பேரூந்தில், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட காதலர் இருவர், பயணிகளினால் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று கொழும்பில் இன்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது.

பாணந்துறையில் இருந்து காலி வீதியூடாக புறக்கோட்டை சென்று கொண்டிருந்த, 400 ஆம் இலக்க பேரூந்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

பாணந்துறை பேரூந்து நிலையத்தில் ஏறிய காதலர் இருவர், பேரூந்தின் பின்பக்க ஆசனத்தில் இருந்து உரையாடிக் கொண்டிருந்தனர். காதலனின் மடியில் காதலி தலைசாய்த்துக் கொண்டு உரையாடினார்.

கல்கிஸை வழியாக பேரூந்து சென்றுகொண்டிருந்தபோது இருவரும் திடீரென வாய்த்தர்க்கம் புரிந்து கைகலப்பிலும் ஈடுபட்டனர். பயணிகளும் பொறுமையாக அவதானித்துக் கொண்டிருந்தனர்.

காதலன் காதலிக்கு கன்னத்தில் அறைந்தார். அழுதுபுலம்பிய காதலி, ஆத்திரமடைந்து, தனது செருப்பால் காதலனுக்கு அடிக்க முற்பட்டபோது, காதலன் காதலியை ஆசனத்திற்கு கீழ் அமுக்கி முதுகில் தாக்கினார். நிலமை மோசமானதை உணர்ந்த அருகில் இருந்த பணிகள் சிலர், காதலனான இளைஞனுக்கு ஏசினர்.

ஆனாலும் இருவருக்குமிடையேயான மோதல் நின்றபாடில்லை. இதனால் பயணிகள் சிலர் காதலியான இளம் பெண்னை வேறு ஆசனத்தில் அமருமாறு கட்டளையிட்டனர். அவரும் வேறு ஆசனத்தில் அமர்ந்தார்.

ஆனாலும் ஆத்திரமடைந்த இளைஞன், மீண்டும் தனது காதலியான இளம் பெண்ணை தாக்க முற்பட்டார். இதனால் பேரூந்து நடத்துநரின் உதவியுடன் இளைஞனின் கைகளை கட்டிய பயணிகள் சிலர், இளைஞன் மீது சரமாரியாகத் தாக்கினர். கொள்ளுப்பிட்டி சந்தியில் கடமையில் இருந்து பொலிஸாரிடம் இளைஞனை ஒப்படைத்தனர்.