உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

அண்ணியை கொன்று சாக்கு மூட்டையில் தூக்கி எறிந்த மைத்துனர்..!!

அண்ணன் மனைவியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி தூக்கி எறிந்த மைத்துனரை போலீஸார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கொல்லுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் மனைவி லட்சுமி(60). இவர் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர். இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து ஒரு மகன் உள்ளார். அவருக்கும் திருமணமாகி, பேரன் பேத்தி இருக்கிறார்களாம்.

லட்சுமி சில ஆண்டுகளுக்கு முன் பெங்களுருக்கு வேலைக்கு சென்ற போது லட்சுமிக்கும் , சின்னசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கும் ஒரு மகன் உள்ளார்.

சின்னசாமிக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் இவருடைய தம்பிகள் மகாலிங்கம் , சின்ன குட்டி பங்கு கேட்டுள்ளனர் , ஆனால் இருவரும் கொடுக்க மறுத்துள்ளனர்.

இந்நிலையில் சின்னசாமி பெங்களுரு வேலைக்கு சென்று விட்ட நிலையில் கடந்த ஞாயிறு மாலை லட்சுமியிடம் மகாலிங்கம் மற்றும் சின்னக்குட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனா்.

அப்போது நடந்த அடிதடியில் , லட்சுமியை சுவற்றில் மோதியுள்ளனா். அப்படியே கீழே விழுந்த லட்சுமி பரிதாபமாக இறந்துள்ளார். அவரை விடியற்காலை சாக்கில் கட்டி இருசக்கர வாகனத்தில் வைத்து தூக்கி சென்று கல் கூடப் பட்டி அடுத்த கொம்ப மலை பகுதியில் வீசியுள்ளனர்.

இதனையடுத்து, இன்று சின்னசாமி பெங்களுருவில் இருந்து வந்து பாலக்கோடு போலீசில் புகார் கொடுத்தார். அதனை தொடரந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மகாலிங்கம் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். பின்னர் பிணத்தை வீசிய இடத்தை காண்பித்தார். பின்னர் லட்சுமியின் உடல் அழுகியதால் அங்கேயே போலிசார் பிரேத பரிசோதனை நடத்தினர். போலீசார் மகாலிங்கத்தை கைது செய்தனர்.

ஆனால் சம்பவத்தில் ஈடுபட்ட சின்னகுட்டி தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் தொடா்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனா்