உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

சீஸ் சாப்பிட்ட குழந்தை பலி… அதிர்ச்சியில் பெற்றோர்…!

அமெரிக்காவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் வழங்கிய சீஸ் சாப்பிட்ட 3 வயது குழந்தை பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயோர்க் நகரில் உள்ள Seventh Avenue Center என்ற ஆரம்ப பாடசாலையில் Elijah Silvera என்ற 3 வயது ஆண் குழந்தை பயின்று வந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் குழந்தைக்கு பாலால் செய்யப்பட்ட சீஸ் உணவை அளித்துள்ளார். சீஸை விரும்பி சாப்பிட்ட குழந்தைக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

தகவலை அறிந்த பெற்றோர் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

’குழந்தைக்கு பாலால் செய்யப்பட்ட உணவு வகைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பது தெரியாமல் ஆசிரியர் சீஸ் உணவை அளித்துள்ளனர்’ எனக் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை உணவால் குழந்தை பலியானதை தொடர்ந்து பொலிசார் நேற்று முன் தினம் பாடசாலையை தற்காலிகமாக மூடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், குழந்தையை இழந்த பெற்றோருக்கு கருணை அடிப்படையில் அப்பகுதி மக்கள் ஓன்லைன் மூலமாக சுமார் 22,000 டொலர் நிதியை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.