உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

செல்போனில் வந்த அழைப்பால் மாணவி தற்கொலை…!

கேரளாவில் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் திருச்சூர் மண்ணாசேரி முக்கம் பகுதியில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளது.

இந்த கல்லூரி விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். திருச்சூர் இடதுறுத்தி பகுதியைச் சேர்ந்த உஸ்மல் உல்லாஸ் (வயது 22) என்ற மாணவியும் விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார்.

நேற்று மாலை மாணவி உஸ்மல் உல்லாஸ் திடீரென்று கல்லூரியின் 4-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதிக்க முயற்சி செய்தார். அவரது சக தோழிகள் உஸ்மலின் நடவடிக்கையில் தெரிந்த மாற்றத்தை வைத்து ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்பதை உணர்ந்து அவரை பின் தொடர்ந்து சென்று தடுக்க முயற்சி செய்தனர்.

ஆனால் அதற்குள் உஸ்மல் உல்லாஸ் கீழே குதித்து விட்டார். உடனடியாக அவரை அதே கல்லூரியில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றிய தகவல் முக்கம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்த கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவரது தோழிகள் நேற்று மாலை உஸ்மல் உல்லாசுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்ததாகவும், போனில் அவர், கோபமாகவும் கண்ணீருடனும் பேசியதாகவும் அதன் பிறகே மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அந்த மாணவியின் செல்போனுக்கு பேசியது யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.