உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

இந்த மர்ம தீவுக்கு போனா உயிரோடு திரும் முடியாதாம்! – எங்கு என தெரியுமா..?

கண் முன்னே மாயமாக மறையும் மனிதர்களை பற்றிய பல கதைகளை நாம் கேட்டது உண்டு.சில ஹாலிவுட் படங்களில் கிராபிக்ஸ் காட்சிகளில் ஒரு பெரிய ஒளி தோன்றி, அதை காணும் மனிதன் உள்ளிழுத்து மாயமாக மறைந்து, பின் வேறொரு இடத்தில் தோன்றுவான். இந்த மாதிரியான காட்சிகள் பொய் என்று தெரிந்தும், ஹாலிவுட் படங்களை வாயை பிளந்து பார்க்கும் மக்கள், நேரில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்தால், மாரடைப்பில் உயிரையே விட்டு விடுவர்.அப்படி பலகீனமானவர்களுக்கு ஒரு செய்தி “இது உண்மை நிகழ்வுகளின் பதிவு”.
கென்யாவின் வடமேற்கு பகுதியில், ஆஃப்ரிக்க கண்டத்தின் மையத்தில் ஒரு பெரிய ஏரி அமைந்துள்ளது. ருடோல்ஃப் என்ற ஒரு அரசனின் பெயர் கொண்டு அழைக்கப்படும் இந்த ரொடால்ஃப் ஏரி, தற்போது “துர்கானா” ஏரி என்று அறியப்பட்டு வருகிறது. உலகின் நான்காம் பெரிய உவர்ப்பு ஏரியான இந்த துர்கானா ஏரியில் பல குட்டித்தீவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் நாம் காணப்போகும் “என்வைட்டினட்” மர்மத்தீவு.மேலே சொன்ன ஹாலிவுட் பட காட்சிகளையெல்லாம் மிஞ்சுகிறது இதன் மர்மம்.

இந்த தீவை இதை சுற்றிவாழும் பழங்குடியின மக்கள் “என்வைட்டினட்” என அழைகின்றனர் காரணம் “என்வைட்டினட்” என்றால் “திரும்பாது” என அர்த்தம் ஆம் இந்த தீவிற்கு நீங்கள் சென்றால் உங்களால் திரும்ப இயலாது, பிணமாக கூட..
“என்வைட்டினட்” தீவில் மர்மம் நிறைந்த பல சம்பவங்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

1900-கள் வரை மீன் பிடித்தல்தான் இங்கு வாழ்ந்த (?) பழங்குடியினரின் முக்கிய தொழில். மீன், முத்து, சிற்பி போன்ற கடல் சார்ந்த பொருட்களை பக்கத்து தீவுகளில் விற்று வாணிபம் செய்து வந்தனர் .நன்றாக வணிகத்தொடர்பு கொண்டிருந்த இந்த தீவு மக்கள், திடீரென, அன்மைத்தீவுகளுக்கு வருவதை குறைத்து விட்டனர். பின்பு சில நாட்களிலேயே “என்வைட்டினட்” தீவு மக்கள், தன் தீவிலிருந்து வெளி வருவதை மொத்தமாக நிறுத்தி விட்டனர்.

சந்தேகத்தில் ஆழ்ந்த அன்மைதீவினர் சிலர் “என்வைட்டினட்” தீவிற்கு என்ன ஆனது? என தெறிந்து கொள்ள சென்ற போது, அவர்கள் திரும்ப வரவில்லை. இப்படி காணாமல் போன மக்களை தேடி காவல் படையுடன் சென்றவர்களும் திரும்பவே இல்லை. பயத்தில் ஆழ்ந்த பக்கத்து தீவினர் நிறைய கதைகளை உருவாக்கினர்.

“பெரிய ஒளி வானில் தோன்றி மனிதன் காற்றில் கரைகிறார்கள்”, “வேற்றுக்கிரக வாசிகள் மனிதர்களை கடத்தி செல்கிறார்கள்”, மேலும் பல கதைகள் இந்த மர்மத்தை சுற்றி இன்றும் உலாவருகின்றன.


இந்த தீவின் மர்ம முடிசுகளை அவிழ்க்கவும், நிலவும் குழப்பத்தை தெளிவாக்கவும், ஆங்கில ஆய்வாளர் “விவின் ஃபுஷ்” என்பவர், தன் மாணவர்கள் “மார்ட்டின் ஷெஃப்லிஸ்” மற்றும் “பில் டாய்சன்” ஆகியோரை கொண்டு ஆராய்ச்சியை தொடங்கினார்.

ஆராய்ச்சிக்காக அந்த தீவுக்கு அந்த இரண்டு மாணவர்களையும் அனுபிவைத்தார் சென்ற இருவரும் மீளவில்லை. அவர்களை தேடி ஒரு குழுவும் சென்றது குழுவில் சிலர், கண் முன்னே மறைந்து போவதை பார்த்து மீதம் இருந்தவர்கள் ஓடி வந்து விட்டனர். இன்று வரை தூரத்திலிருந்தே ஆய்வுகள் செய்யப்பட்டுவருகின்றன.

ஹெலிகாப்டர்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் படி,பழங்குடியினரால் கட்டப்பட்ட குடிசைகள் அப்படியே இருக்கின்றன.ஏதேனும் நோய் தோற்று பரவி மக்கள் இறந்திருக்கலாம் என்ற கூற்றுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் ஒரு மனித எலும்பு கூடுகள் கூட தென்படவில்லை.அழுகிய முதலைகளும், பிடித்த மீன்களின் காய்ந்த உடல்களும் தான் எச்சங்களாக தென்பட்டன.

“ஆயிரத்தில் ஒருவன்” படத்தை நிஜத்தில் காட்டும் இந்த “என்வைட்டினட்” தீவின் மர்மங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. அறிவியல் ஆயிரம் ஆச்சர்யங்களை நிகழ்த்தினாலும் விடை தெரியாத இந்த தீவின் கேள்விகளுக்கு விழி பிதுங்கித்தான் நிற்கிறது.