உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

போலி சாரதி அனுமதிப் பத்திரம் தயாரித்தவர் கைது

சட்டவிரோதமாக போலி மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட, ஒருவர் கொடவில பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

38 வயதான இவர் வசம் இருந்து, போலி சாரதி அனுமதிப் பத்திரங்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர் நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில், சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் வேலை பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவரை இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.