உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

இந்துஜா கொலை வழக்கு: எனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது

சென்னையில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த ஆகாஷ் "எனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது" என நினைத்து தான் கொலை செய்தேன் என பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

இந்துஜா கொலை வழக்கு:

சென்னை ஆதம்பாக்கத்தில் வசித்து வந்த இந்துஜா என்பவரை ஆகாஷ் என்ற மாணவர் ஒரு தலையாக காதலித்து வந்தார்.

அவரின் காதலை இந்துஜா ஏற்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி கொலை செய்தார். தமிழகத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ஆகாஷை போலீசார் கைது செய்து விசாரானை நடத்தினர்.

விசாரணையில், இந்துஜாவை எனக்கு சிறுவயதிலிருந்தே தெரியும். இருவருமே ஒருவரையொருவர் விரும்பினோம். அவர் படித்து ஐடி கம்பெனிக்கு வேலைக்கு சென்று விட்டார். நான் சரியாக படிக்காததால் வேலையில்லாமல் ஊரை சுற்றி வந்தேன்.

அதனால் இந்துஜா ஸ்டேட்டஸ் பார்த்து என்னை ஒதுக்க ஆரம்பித்து விட்டார். அவர் சில மாதங்கள் என்னிடம் பேசுவதை தவிர்த்து விட்டார். ஆனால் என்னால் மறக்கமுடியவில்லை. அவருடைய வீட்டிற்கு செல்லும் போது என்னை அசிங்கமாக திட்டி அனுப்பினர். இதனால் ஆத்திரத்தில் எனக்குக் கிடைக்காத இந்துஜா இனி யாருக்கும் கிடைக்கக் கூடாது என நினைத்து தான் அவளை கொன்றதாக வாக்கு மூலம் கொடுத்துள்ளான்.

இந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்ட இந்துஜாவின் அம்மா ரேணுகாவுக்கு 50 சதவிகிதத்துக்கு மேல் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சகோதரி நிவேதாவுக்குக் குறைந்த பட்சம் தீக்காயங்கள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.