உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

யாழ்.நல்லூர் முடமாவடியில் வீடொன்றுக்குள் புகுந்து இளைஞர் குழு தாக்குதல்!

யாழ்.நல்லூர் முடமாவடியில் வீடொன்றுக்குள்  புகுந்து தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்த மோட்டார் சைக்கிளைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பலே கோண்டாவிலில் உணவகத்துக்குள் அட்டூழியம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உணவகத்தில் பொருத்தியிருந்த சிசிரிவி கமரா பதிவை ஆராய்ந்த பின்னர் இந்த தகலை கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்வெட்டுக் கும்பல் நேற்றிரவு 7 மணியிலிருந்து 9 மணிக்குள் சங்குவேலி, ஆனைக்கோட்டை, முடமாவடி மற்றும் கோண்டாவில் ஆகிய பகுதிகளில் அட்டூழியம் புரிந்தது.

இந்தச் சம்பவங்களில் 8 பேர் படுகாயமடைந்தனர். இதில் முடமாவடியில் வீடொன்றுக்குள் புகுந்து இருவரை வாளால் வெட்டிக்காயப்படுத்தியதுடன் அந்த வீட்டு முற்றத்தில் நின்ற பல்சர் மோட்டார் சைக்கிளையும் அபகரித்துச் சென்றது.

அந்த பல்சர் மோட்டார் சைக்கிளை கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாகவிருந்த உணவகம் மீதான தாக்குதலின் போது கும்பல் கொண்டு சென்றுள்ளது.

இந்த விடயம் உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமரா பதிவின் மூலம் கண்டறிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடங்களில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளையும் தடயவியல் ஆய்வுகளையும் முன்னெடுத்துள்ளனர்.
எனினும் தாக்குதல் நடத்திய கும்பல் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.