உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

முதலில் மீனாட்சிக்கு ஜோடியாக தேர்வு செய்யப்பட்ட சரவணன் இவர்தானா?

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் சரவணன்-மீனாட்சி. இந்த சீரியலில் ஒரே மீனாட்சி, பல சரவணன் என நிறைய மீம்ஸ்கள் வந்தது. ஆனாலும் மோசமான விமர்சனங்களை தாண்டி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சரவணனாக முதன்முதலில் ரச்சிதாவுடன் நடித்தவர் இர்பான். இவருக்கு பிறகு நிறைய சரவணன்கள் சீரியலில் வந்தார்கள்.

அதில் இர்பானுக்கு அடுத்து சரவணனாக சஞ்சீவ் அவர்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்டாராம். ஆனால் இறுதியில் மீனாட்சியை விட சஞ்சீவ் கொஞ்சம் சிறியவர் போல் இருப்பதால் அவரை நடிக்க வைக்கவில்லையாம்.

சஞ்சீவ் தற்போது அதே தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலில் கார்த்திக் என்ற பெயரில் நடித்து வருகிறார்.