உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மோட்டோ x4 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

மோட்டோ இந்தியா நிறுவனத்தின் மோட்டோ X4 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ X4 வெளியீட்டிற்கான அழைப்பிதழ்களை மோட்டோ வெளியிட்டுள்ளது.
மோட்டோ இந்தியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டிற்கான அழைப்பிதழ்கள் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் மோட்டோ X4 ஸ்மார்ட்போன் நவம்பர் 3-ம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில், இதன் வெளியீடு தள்ளிப்போனது.

இந்த ஆண்டு நடைபெற்ற IFA விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ X4 ஸ்மார்ட்போனில் 12 எம்பி + 8 எம்பி பிரைமரி கேமரா, பேக்கிரவுண்டு பிளர், போர்டிரெயிட், செலக்டிவ் பிளாக் மற்றும் வைட் மற்றும் டூயல் ஆட்டோஃபோகஸ் பிக்சல் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் குறைந்த வெளிச்சத்திலும் வேகமாக ஃபோகஸ் செய்யும். இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா, 4 எம்பி அடாப்டிவ் லோ-லைட் மோட் வழங்கப்பட்டுள்ளது.


ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டிருக்கும் மோட்டோ X4 IP64 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியும் கொண்டுள்ளது.

மோட்டோ X4 சிறப்பம்சங்கள்:

– 5.2 இன்ச் 1920×1080 பிக்சல் ஃபுல் எச்டி LTPS IPS டிஸ்ப்ளே
– 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 14nm பிராசஸர்
– அட்ரினோ 508 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
– டூயல் சிம்
– 12 எம்பி + 8 எம்பி பிரைமரி கேமரா
– 16 எம்பி செல்ஃHி கேமரா
– வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)
– கைரேகை ஸ்கேனர்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்ஏஎச் பேட்டரி, டர்போ சார்ஜிங்

சூப்பர் பிளாக் மற்றும் ஸ்டெர்லிங் புளூ நிறங்களில் கிடைக்கும் மோட்டோ X4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.23,999 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள மோட்டோ X4 ஸ்மார்ட்போனின் முன்புறம் மற்றும் பின்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டு பாதுகாக்கப்படுகிறது.