உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

சில நிமிடத்தில் உயிரை பிரிக்கும் கருணைக்கொலை இயந்திரம்

எந்த வலியும் இல்லாமல் உயிரை பிரித்துவிடும் ஒரு இயந்திரத்தை கருணைகொலை ஆர்வலர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கருணைக்கொலை ஆர்வலர் டாக்டர் பிலிப் நிட்ச்கே இயந்திரத்தின் உதவியுடன் சில நிமிடத்தில் உயிரை வலியில்லாமல் இறக்கும் இயத்திரத்தை தயாரித்துள்ளார். நெதர்லாந்தை சேர்ந்த ஒரு பொறியாளர் இதை வடிவமைத்துள்ளார். இந்த இயந்திரத்திற்கு ’தி சார்கோ கேப்சியூஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தை யார் வேண்டுமாலும் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு முன், தங்கள் மனநிலையை சோதிக்கும் சில கேள்விகள் கேட்கப்படும். அதற்கு பதிலளித்தால் அதன் முடிவில் நான்கு இலக்க எண் தரப்பட்டு இயந்திரத்தின் மாடலை பதிவிறக்கம் செய்து 3டி பிரிண்டரில் எங்கு வேண்டுமானாலும் ஒன்று சேர்த்து பொருத்திக் கொள்ளலாம்.

டாக்டர் பிலிப் நிட்ச்கே கூறுகையில், போதை பொருட்கள் பயன்படுத்தாமல் ஒரு பொத்தானை அழுத்தியபடி நீர்ம நிலையில் நைட்ரஜன் வாயு ஆக்ஸிஜன் குறைக்கப்பட்டு வலியில்லாமல் மரணத்தை தேடிக்கொள்ளலாம். சார்கோ இயந்திரத்தை சட்ட ரீதியாக தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம்.