விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன், பிரமாண்ட வியாபாரம்

தமிழ் சினிமாவில் தற்போதைய உச்ச நட்சத்திரங்கள் என்றால் விஜய், அஜித் தான். இவர்கள் படங்களின் வசூல் சாதனைகளை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் இவர்களுக்கு பிறகு பல நடிகர்கள் இந்த இடத்தை பிடிக்க ஓடி வர, சிவகார்த்திகேயன் குறுகிய காலத்தில் அந்த இடத்தை நோக்கி வந்துவிட்டார்.

சிவகார்த்திகேயனின் வேலைக்காரம் படம் தமிழகத்தில் மட்டும் ரூ 38 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.

அதோடு, தமிழகம் முழுவதும் சுமார் 400 திரையரங்குகளில் இப்படம் வெளிவர, பல இடங்களில் அதிகாலை காட்சிகள் திரையிடப்படவுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.