மானிப்பாயில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது

மானிப்பாய், வட்டுக்கோட்டை மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர் என்று மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாலக்க ஜெயவீர தெரிவித்தார்.

“சந்தேகநபர்கள் 18,20 வயதினர். சங்கானை கட்டுடையைச் சோ்ந்தவர்கள்.  சங்கானை - சேச் வீதி கொள்ளை, சண்டிலிப்பாய் திருட்டு, சுதுமலையில் மதகுரு ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற நகை, பணம் திருட்டு, வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் இவர்களுக்கும் தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வயது முதிர்ந்த தம்பதிகள் உள்ள வீடுகளுக்கு வேலை செய்வதற்கு செல்லும் இவர்கள் அங்குள்ள நகைகள் மற்றும் பணம் தொடர்பில் திருடர்கள் மற்றும் கொள்ளையர்களுக்கு தகவல் வழங்கி வந்துள்ளனர். பின்னர் கொள்ளையிடப்படும் நகை, பணத்தில் இவர்கள் பங்கு போட்டுக்கொள்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். கைது செய்யப்பட்டர்களிடம் இருந்து 2 சங்கிலிகள், ஒரு மோதிரம், தோடு ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.