உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

சிறுமியின் உயிரை கொடூரமாக பறித்த தொலைக்காட்சி தொடர் - பெற்றோர்களே உஷார்!

ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினராக மாறிவிட்டது தொலைக்காட்சி தொடர்கள். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும், குழந்தைகளும் கூட சீரியலை பார்க்க தொடங்கிவிட்டனர்.

சினிமாவுக்கு இருப்பதுபோல் சின்னத்திரைக்கு சென்சார் இல்லாததால் பல நேரங்களில் அத்துமீறுகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு தொலைக்காட்சிகளில் வரும் விஷயங்களில் எது உண்மை என்பது தெரியாமல் அதை முயற்சி செய்து பார்ப்பார்கள்.

அந்தவகையில் சில வருடங்களுக்கு முன்பு ஷக்திமான் பார்த்து மாடியிலிருந்து கீழே விழுந்து குழந்தைகள் இறந்த சம்பவம் நடந்தது.

இந்நிலையில் சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பிரார்த்தனா என்ற 7 வயது சிறுமி ஒருவர் தமிழ் சீரியலின் கன்னட டப்பிங் தொடர் ஒன்றில் வரும் நாயகி நெருப்பில் நடனமாடுவதை பார்த்து முயற்சி செய்துள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி செய்த காரியத்தால் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சீரியலை கடந்த ஒரு வாரமாக சிறுமி தீவிரமாக பார்த்துள்ளார். நான் தான் அலட்சியமாக இருந்துவிட்டேன் என சிறுமியின் தாயார் கதறியுள்ளார்.

பெற்றோர்களே குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருங்கள்....