கள்ளக்காதல்!! சிங்கள வைத்தியரின் குடும்பத்தைக் குழப்பிய யாழ் பல்கலைக்கழக மாணவன்

யாழ் பல்கலைக்கழக 2ம் ஆண்டு மாணவனுடன் முகப்புத்தகத்தில் தொடர்பு கொண்டு காதலித்து பின்னர் பல தடவைகள் தனியாக சந்தித்து வந்த இளம் சிங்களக் குடும்பப் பெண்ணை வைத்தியரான கணவன் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

அத்துடன் குறித்த மாணவன் தொடர்பாக கம்பஹாவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.

குறித்த மாணவனும் சிங்களப் பெண்ணும் முகப்புத்தகம் மற்றும் வாட்ஸ்அப் போன்றவற்றில் பரிமாறிக் கொண்ட அந்தரங்கப் புகைப்படங்களையும் கணவன் பொலிசாரிடத்தில் கொடுத்துள்ளார். குறித்த புகைப்படங்களை மனைவியின் தொலைபேசியில் கண்டு அதிர்ச்சியடைந்தே இவ்வாறான நடவடிக்கையை எடுத்துள்ளார் கணவன். குறித்த யாழ் பல்கலைக்கழக மாணவன் வவுனியாவைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகின்றது.

குறித்த மாணவன் பல தடவைகள் தனது மனைவியை தனியாக சந்தித்துள்ளார் என்பதும் அவர்கள் தனியாக சந்தித்துள்ளமை தொடர்பான புகைப்படங்களையும் ஆதாரங்களான கணவன் பொலிசாரிடம் கொடுத்துள்ளார். அத்துடன் மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்து பெருமளவு பணம் எடுக்கப்பட்டுள்ளது என்பதும அந்தப் பணம் எங்கே செலவு செய்யப்பட்டது என்ற விபரத்தை மனைவியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாதுள்ளதாகவும் அது தொடர்பாகவும் விபரத்தைப் பெறுமாறும் கணவன் பொலிசாருக்கு முறையிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் கடமையாற்றும் குறித்த வைத்தியர் தனது மனைவியை காதலித்தே திருமணம் முடித்ததாகவும் அவர்கள் இருவருக்கும் 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளதாகவும் சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.