இலங்கை பொலிஸாருக்கு ஏமாற்றம் கொடுத்த விடுதலைப் புலிகள்

விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிகப்பட்ட தங்கத்தை தேடியவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் கிடைத்துள்ளது.

விஸ்வமடு பிரதேசத்தில் விடுதலை புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 22ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவிற்கமைய இந்த அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தப் பகுதியில் தங்கம் தேடி தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த நபர்களை் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு அமைய தங்கம் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நீதிபதியின் முன்னால் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அங்கு எவ்வித சந்தேகத்திற்குரிய பொருட்களும் கிடைக்கவில்லை. இதனையடுத்து தங்கம் தேடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.