உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

முதலிரவில் மனைவியின் முகம்... அதிர்ச்சியடைந்த கணவன்!.. பின்பு நடந்தது என்ன?..

திருமணம் முடிந்த தம்பதிகளில் முதலிரவு அன்று மனைவியின் முகத்தினை பார்த்த கணவன் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம் அவளது நிறம் சற்று கறுப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான்.

படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் கணவன் தன் மீது வெறுப்பினைக் காட்டினாலும் அளவுகடந்த பாசத்தினை வைத்திருந்தாள்.

ஒருநாள் கணவனிடம் ஏன் இப்படி என்னை வெறுக்கின்றீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளிக்காமல் சென்றுவிட்டான் கணவன். இரவு 1மணியளவில் அவனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

வலி தாங்க முடியாமல் கணவனின் கதறலை காணமுடியாத மனைவியும் கதறிதுடித்த நிலையில் தனது உறவினரையும், கணவனின் நண்பரையும் போன் செய்து அழைத்துள்ளார்.

பைத்தியக்காரி மாதிரி துடித்த மனைவியை பார்த்த கணவர் ஒன்றும் புரியாமல் திரு திருவென முழிக்கின்றான். தகவறிந்த கணவனின் நண்பர் கார் எடுத்துக் கொண்டு வேகமாக வருகிறார். தன் மார்போடு கணவனை அனைத்துக் காண்டு அண்ணா கொஞ்சம் வேகமாக செல்லுங்கள் என்கிறாள். அந்த நொடியில் ஒரு கணம் கணவன் இவளையா வெறுத்தேன் என்று கண் மூடி அழுதான்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற கணவர் புகைப்பிடித்ததே இதற்கான காரணம் என்று மருத்துவர் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட உறவினர்கள் அவனுக்கு அறிவுரை சொல்ல அவன் தன் மனைவியியை தேடுகிறான்.

அவள் கதவு அருகில் நின்று இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள். தன் மனைவியின் பெயரை முதன்முதலாக சொல்லி சத்தமாக அழைக்கிறான். சடார் என்று “என்னங்க” என்று பதறி ஓடி வருகிறாள். அழுது அழுது அவள் கண்கள் சிவந்து போனது. அவள் கையை பிடித்து இனி நான் புகை பிடிக்க மாட்டேன்! உனக்காக என்கிறான்.

தன் கணவன் தன்னுடன் பேசுகிறான் என்ற சந்தோஷமும், அழுகையும் ஒன்றாய் வர அழுது கொண்டே சிரிக்கிறாள். என் மேல் இவ்வளவு பாசமா என்று கணவன் கண்ணால் கேட்க நீங்கள் என் கணவர். நான் உங்கள் மனைவி என்று ஒரு வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லி அவன் நெற்றியில் முத்தமிடுகிறாள் அந்த காதல் கொண்ட மனைவி.

தற்போதும் சில பெண்கள் தனது கணவன் பெயரைக் கூட சொல்வதில்லை. காரணம் அவர் மீதுள்ள மரியாதையே. எத்தனை உறவுமுறையும் ஒரு காலகட்டத்தில் நம்மைவிட்டு கட்டாயம் பிரிந்துவிடும். ஆனால் கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை நம் பின்னால் தொடர்ந்து கொண்டே இருக்கும்.