உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

பல உயிர்களை பழிவாங்கிய கொதிக்கும் ஆசிட் குளம்! சுற்றுலாப் பயணிகள் அதிகம் படையெடுக்க காரணம் என்ன?

புவியில் அதிசயங்களுக்கும் ஆச்சர்யங்களுக்கும் அளவு கிடையாது. இயற்கை தன்னுள் ஏராளமான மர்மங்களைக் கொண்டிருக்கிறது.

அதில் ஒன்று தான் ஆசிட் குளம். இந்த ஆசிட் குளம் சுற்றுலாத் தளமாக விளங்குகிறது என்றால் நம்புவீர்களா?

நியூயார்க் நகரில் உள்ள பிரபலமான பூங்கா ஒன்றின் பெயர் யெல்லோ ஸ்டோன் என்பதாகும். இங்கு தான் ஆசிட் குளம் உள்ளது. இந்த பூங்கா 15 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது.

இங்கு பனிகளால் சூழப்பட்ட காடுகளும் உண்டு. இங்கு ஜனவரி மாதத்தில் வெறும் 9 டிகிரி மட்டுமே வெப்பநிலை இருக்குமாம். ஆனால் ஜூலை மாதத்தில் 80 டிகிரியில் வெப்பம் தகிக்குமாம்.

மிக நீண்ட இரும்புப் பாலம் ஒன்று அமைக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்குளத்தில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி எட்டிப் பார்த்து சிலர் உயிரிழந்த சம்பவங்களும் உண்டு.