காதல் விவகாரத்தில் மோதல்! அக்காவின் கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த இளைஞர்!

இலங்கை -ரத்தொட - எலகலவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காதல் தொடர்பு குறித்து ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவரின் தலைப்பகுதிக்கு கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 46 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்தது.

27 வயதுடைய நபரின் சகோதரியின் கணவரான 46 வயதுடைய கொலை செய்யப்பட்ட நபர் குறித்த இளைஞரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் , சம்பவ தினத்தன்று இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர்.

இதன்போது , இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ள நிலையில் , 27 வயது இளைஞன் கூரிய ஆயுதத்தால் குறித்த நபரை தாக்கி கொலை செய்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

ரத்தொட காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.