Trending News...

நான் ஒரு பெண் என்பது, என் மனைவிக்கு 10 வருடங்களாக தெரியாது!

இது அமெரிக்காவின் மினசோட்டா (Minnesota) எனும் பகுதியில் வாழ்ந்து வரும் ஆணின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்...

நான் 'ஆண்' என்பதை என்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியாது. பிறப்பால் நான் ஆண் என்பதற்கு பதிலாக பெண்ணாக இருந்திருக்கலாம் என்பதே எனது ஆயுட்கால விருப்பம். ஆனால், அது கடைசி வரை என்னால் அடைய முடியாத ஒன்றாக மாறிவிட்டது என்பதே என் ஆயுட்கால மன நோயாக மாறிவிட்டது.
லாராவிடம் (என் மனைவி) இதுகுறித்து சொல்லிவிட வேண்டும் என பலமுறை நான் எண்ணியதுண்டு. ஆனால், இந்த சமூகம் மற்றும் மக்களின் மீதுள்ள அச்சமும், லாரா என்னைவிட்டு பிரிந்துவிட்டால் நான் என்ன ஆவான் என்ற சோகமும் இதுக்குறித்து அவளிடம் ஒரு வார்த்தைக் கூட கூற முடியாத சூழலில் என்னை சிக்க வைத்துள்ளது.
நான் எப்போதிருந்து எப்படி மாறினான், எனக்கு என்ன ஆனது என்று எனக்கே தெரியவில்லை. எனது 17 வயதிலிருந்து நான் நானாக இல்லை என்பதை மட்டும் நான் அறிவேன்...

செக்ஸ்!
நான் வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்த மாணவன். என் கல்லூரிக் காலத்தில் நான் விரும்பியது, நிறைய நண்பர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும், நிறைய செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே. நான் எனது கல்லூரிப் படிப்பை கொலராடோவில் பயின்றேன்.
திடீரென எனக்கு அடிக்கடி நன்கு வியர்க்கும். அதன் காரணம் என்ன என்பது ஆரம்பத்தில் என்னால் புரிந்துக் கொள்ள இயலவில்ல.
   

ஆடை!
என் சட்டை முழுவதும் வியர்வையில் நனைந்துவிடும். முகத்தில் வழியும் வியர்வையை கர்சீப் கொண்டு துடைத்துக் கொண்டே இருப்பேன். எனது ஆடை விலகாமல் பார்த்துக் கொள்ள துவங்கினேன். நான் ஏன் இப்படி செய்கிறேன் என எனக்கே தெரியவில்லை.
என்னிடம் நான் மட்டுமே இந்த மாற்றங்களை கவனித்தேன். என் நண்பர்கள் எப்போதும் போலவே என்னுடன் பழகி வந்தனர்.

   

பெண்
போகப்போக, நான் ஆணாக இருப்பதே எனக்கு பிடிக்கவில்லை. நான் ஏன் ஒரு பெண்ணாக பிறக்கவில்லை என எண்ணி வருந்த ஆரம்பித்தேன். எப்படியாவது இந்த எண்ணங்கள் இருந்து அல்லது ஆணாக இருப்பதில் இருந்து தப்பித்து நான் விரும்புவது போன்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை என்னுள் அதிகமாக இருந்தது. ஆசை என்பதை விட, ஏக்கம் என்று கூறினால், அது பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன்.
   

ஆசை!
ஆனால், எனக்கு ஆண்கள் மீது விருப்பமோ, காதலோ வந்ததே இல்லை. எனக்கு எப்போதுமே பெண்களை தான் பிடிக்கும். ஆனால், நானும் பெண்ணாக இருக்க விரும்புகிறேன். இதுதான் எனது பிரச்சனையே. இதற்கான தீர்வு எனக்கு கடைசி வரை கிடைக்கவே இல்லை. கொஞ்சம், கொஞ்சமாக என்னைத் தனிமைப் படுத்திக் கொள்ள நினைத்தேன். ஆனால், அது கடைசி வரை நடக்காமலே போனது. அதற்கு காரணம் லாரா.
   

லாரா!
அப்போது எனக்கு 17 வயது. கல்லூரியின் உணவு விடுதி பகுதியில் அமர்ந்து தனியாக உணவருந்திக் கொண்டிருந்தேன். அப்போது லாராவும் அங்கே இருந்தாள். ஆனால், அப்போது, அந்த தருணத்தில் நான் லாராவை கவனிக்கவே இல்லை. என்னுள் ஓடிய எண்ணங்கள் அனைத்தும் எப்படி பெண்ணாக நான் மாற முடியும், இந்த ஆண் உடலில் இருந்து எப்படி தப்பிக்க முடியும் என்பது மட்டுமே.
   

ஃபேஸ்புக்!
ஃபேஸ்புக் துவக்கப்பட்ட ஆரம்பக்கட்ட காலம் அது என கருதுகிறேன். அனைவருக்கும் ஃபேஸ்புக் மீது ஒருவித மோகம் அதிகரித்து வந்த நாட்கள் அது. அன்று இரவு, லாரா என்ற பெண்ணிடம் இருந்து எனக்கு செய்தி ஒன்று வந்தது. நான் தான் சொன்னேனே, எனக்கு பெண்கள் என்றால் ரொம்பவே பிடிக்கும் என்று. பெரும் மகிழ்ச்சி, அவள் மிகவும் அழகானவளும் கூட. நாங்கள் பேச ஆரம்பித்தோம்.
   

டிஷர்ட்!
அன்று கல்லூரியில் நான் அணிந்திருந்த டிஷர்ட் பிடித்துப் போய், என்னை ஃபேஸ்புக்கில் தேடிப் பிடித்ததாக கூறினாள். ஆம்! அன்று நான் எனக்கு பிடித்த ஒரு ராக்ஸ்டாரின் படம் பதித்த டிஷர்ட் அணிந்திருந்தேன். அதுவே, எனக்கு லாரா கூறிய பிறகு தான் தெரியும். அவளுக்கும் அந்த கலைஞரை பிடிக்கும் என்பதை அவள் பின்னர் கூறியதன் மூலம் அறிந்துக் கொண்டேன்.
   

வாக்கிங்!
மரங்கள் நிறைந்த பூங்கா அருகே அமைந்திருக்கும் சாலையில் என்னுடன் நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என தனது விருப்பத்தை அறிவித்தாள் லாரா. யார் வேண்டாம் என்பார்கள். லாரா போன்ற அழகிய பெண் அழைத்தால் யாரும் நோ சொல்ல மாட்டார்கள். உடனே ஓகே போகலாம் என்றேன்.
   

நிஜமானது!
மறுநாள் மாலையே அது நிஜமானது. நாங்கள் இருவரும் சாலையின் இருபுறமும் மரங்கள் நிறைந்த பூங்கா ஒன்றில் நடந்துக் கொண்டிருந்தோம். ஏறத்தாழ மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நாங்கள் நடந்தபடி பல விஷயங்களை பேசி, மகிழ்ந்து, சிரித்து எங்களை பற்றி ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துக் கொண்டோம்.
   

நட்பு!
எங்களுக்குள் ஒரு நட்பு மலர்ந்தது. உண்மையில் அவள் மீது சீக்ரெட் கிரஷ் கொண்டிருந்தேன் நான். இது அவளுக்கு தெரியாது. நாங்கள் கொஞ்ச நாட்கள் டேட்டிங் செய்து வந்தோம். ஒருமுறை படத்திற்கு சென்று வீடு திரும்பிய போது முத்தமிட ஆசை என கூறினேன். கன்னத்தில் மட்டும் என்றால் ஒகே என்றாள். அவளை அன்று தான் முதல் முறையாக முத்தமிட்டேன்.


லிப்லாக்!
கொஞ்ச நாட்கள் கழிந்தன... எனக்கு உண்மையான முத்தம் வேண்டும் என மீண்டும் எனது ஆசையை அவளிடம் தெரிவித்தேன். நாம் இருவரும் நிஜமாகவே நண்பர்கள் தானா? என கேட்டாள். இல்லை என்பதே உண்மையான பதில். எல்லாருக்கும் நீ என்னை காதலிக்கிறாயா? என்று கேட்டு, ஆம் என பதில் அளித்து காதல் உறவு துவங்கும்.
ஆனால், எனக்கும் லாராவுக்கும் இடையேயான காதல், இல்லை என்ற பதிலில் துவங்கியது. இது நட்பா என அவள் கேட்ட கேள்விக்கு, நான் இல்லை என கூறிய தருணத்தில் மலர்ந்தது எங்கள் காதல். லிப்லாக் முத்தமும் பரிசாக கிடைத்தது.
   

காதல்!
நாங்கள் இருவரும் காதலிக்க துவங்கிய போது எங்கள் வயது 18. அனைவருக்கும் முதல்காதல் வெற்றிகரமாக அமையுமா என்ற அச்சம் இருக்கும். ஆனால், எனக்கு மிக எளிமையாக அதுவாக அமைந்தது. லாரா போன்ற ஒரு பெண்ணை துணையாக ஏற்பதற்கு நான் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
இப்படி நிம்மதியாக சென்றுக் கொண்டிருந்த தருணத்தில், என்னுள் உறங்கிக் கொண்டிருந்த அந்த மிருகம் மீண்டும் விழித்துக் கொண்டது.
   

நான் யார்?
லாராவுடனான இந்த நாட்களில், என்னுள் இருந்த 'நான் யார்?' என்ற குழப்பம் கொஞ்ச காலம் காணாமல் போயிருந்தது. ஆனால், அந்த எண்ணங்கள் மீண்டும் என்னை தொந்தரவு செய்ய ஆரம்பித்தது. இதற்கு நடுவே, லாராவுடன் காதல், படிப்பு முடித்து வேலை... அடுத்து எங்கள் திருமணம் என பல விஷயங்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன.
   

திருமணம்!
எனக்கும் லாராவுக்கும் திருமணமும் நடந்தது. ஆனால், நான் அவளை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு பெண் என்பதை அவளிடம் கூறவில்லை. ஆம், உடல் மட்டுமே ஆணாக இருந்து என்ன பயன்? நான் அவளை உண்மையாக நூறு சதவிதம் மகிழ்விக்க வேண்டும் என்றால் ஒரு ஆணாக இருக்க வேண்டுமே.
நான் அறிவேன், என்னால் நிச்சயம் அவளை நூறு சதவிதம் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியாது. ஆனால், அவளை விட்டு தனியாகவும் என்னால் இருக்க முடியாது.
   

திருநங்கை?
அதற்கு என நான் ஒரு திருநங்கையா? என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். நான் திருநங்கையும் கிடையாது. நான் பிறப்பால் ஏன் ஒரு பெண்ணாக இல்லை என்ற எண்ணம் மட்டுமே என்னுள் மிகுந்த மன அழுத்தம் மற்றும் வருத்தத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
என்னால் லாராவுடன் உடலுறவில் ஈடுபட முடியும், என்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். உடலால் நான் ஒரு ஆரோக்கியமான ஆண் தான். ஆனால், மனதால்?
   

மனம் முன் வர மறுக்கிறது?
உடலுறவில் ஈடுபட வேண்டும் என்றால் முதலில் மன ரீதியாக ஒரு இணைப்பு உண்டாக வேண்டும். மன ரீதியாக இருவர் முழுமையாக இணையாமல், ஏற்படும் உடலுறவு யாரும் கற்பழிப்புக்கு சமம் என கருதுகிறேன். அனைத்திற்கும் மேல், எனக்கு பிறக்கும் குழந்தைக்கும் இதே பிரச்சனை (எனக்கு இருக்கும் பிரச்சனை) வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் என்னிடம் நிறையவே இருக்கிறது.
   

பத்து வருடங்கள்!
நானும், லாராவும் ஒருவரை ஒருவர் அறிந்து இன்றுடன் பத்து வருடங்கள் ஆகிறது. இன்று வரை நான் ஒரு பெண் என்பதை அவளிடம் கூறாமல் ஏமாற்றி வருகிறேன். இதை நினைக்கும் போதெல்லாம் என்னுள் பெரும் வலி ஏற்படுகிறது. பல சமயங்களில் லாராவிடம் இதுக்குறித்து கூறிவிடலாம் என யோசிப்பேன். ஆனால், அதன் பின் அவள் என்ன முடிவு எடுப்பாள் என சிந்திக்கும் போது வேண்டாம் என தீர்மானம் செய்துவிடுவேன்.
நான் ஒரு பெண்ணாக வாழ்ந்து வருகிறேன் என்பதை பத்து வருடமாக தெரியாமலே என்னுடன் இருந்து வருகிறாள் என் மனைவி லாரா.
இதற்கான தீர்வு தான் என்ன? நான் என்ன செய்ய வேண்டும்? என பல கேள்விகள் என்னுள் தினம் தினம் எழுந்துக் கொண்டே இருக்கின்றன.