யாழில் தங்கையை வல்லுறவுக்குள்ளாக்கியவனுக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை

உறவுமுறைத் தங்கையை வன்புணர்ந்த அண்ணனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை – யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பு

உறவுமுறையாக தங்கையான சிறுமியை தகாத பாலியல் உறவால் தாயாராக்கி குடும்பத்
தலைவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம்
இன்று தீர்ப்பளித்தது.

“சிறிய தாயாரின் மகளான அந்தச் சிறுமி தங்கை முறை உடையவர். உறவுமுறைத் தங்கையுடன்
தவறான பாலியல் உறவு வைத்தமைக்கு எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை
வழங்கப்படுகிறது. எதிரி அதே குற்றத்தை மீளவும் புரிந்துள்ளதால் அதற்கும் 10 ஆண்டுகள்
சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. இரண்டு தண்டனைக் காலத்தையும் எதிரி ஏக காலத்தில்
அனுபவிக்க முடியும்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபா இழப்பீட்டை எதிரி வழங்கவேண்டும். அதனை
வழங்கத் தவறின் 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும். தண்டமாக 10
ஆயிரம் ரூபா செலுத்தவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 2 மாதங்கள் சிறைத் தண்டனையை
அனுபவிக்க நேரிடும்” என்று தண்டனைத் தீர்ப்பளித்தார் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர்
இளஞ்செழியன்.

பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி 14
வயதுடைய சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார். அதுதொடர்பில் சிறுமி வழங்கிய
வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறுமியின் பெரிய தாயாரின் மகனான குடும்பத் தலைவர்
ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்று வழக்கேடுகள்
சட்டமா அதிபரிடம் பாரப்படுத்தப்பட்டன. அத்துடன், சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

16 வயதுக்குட்பட்ட சிறுமியான உறவுமுறைத் தங்கையை இரண்டு தடவைகள்
வன்புணர்வுக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தனித் தனியே முன்வைத்து சந்தேகநபர்ககு
எதிரான குற்றப்பத்திரிகையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் தாக்கல் செய்தார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு
வந்தது. எதிரி சட்டத்தரணி ஊடாக மன்றில் முன்னிலையானார்.

“ உறவுமுறைத் தங்கையை வன்புணர்வுக்குட்படுத்தியமைக்கு எதிரி தற்போது வருத்தமடைகின்றார்.
அவர் மீதான இரண்டு குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக்கொள்கிறார். எதிரி 5 பிள்ளைகளின்
தந்தையாவார். எனவே அவரின் குடும்ப நிலையைக் கருத்திற்கொண்டு இந்த மன்று குறைந்தபட்ச
தண்டனையை வழங்கவேண்டும்” என்று எதிரியின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் கருணை
விண்ணப்பம் முன்வைத்தார்.

“எதிரி தனது குற்றங்களை ஏற்றுள்ளார். எனினும் உறவுமுறையான தங்கையை அவர்
வன்புணர்வுக்குட்படுத்தியதன் ஊடாக அந்தச் சிறுமிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளார். எதிரி
இந்தக் குற்றத்தைச் செய்யும் போது, சட்டமுறைத் திருமணத்தின் ஊடாக 3 பிள்ளைகளின்
தந்தையாகவும் இருந்துள்ளார். எதிரியின் குற்றத்துக்கு 7 ஆண்டுகள் தொடக்கம் 20
ஆண்டுகள்வரையான சிறைத் தண்டனையை வழங்க முடியும். எனவே எதிரிக்கு அதிகபட்ச தண்டையை
வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்கவேண்டும்” என்று அரச
சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றில் விண்ணப்பம் செய்தார்.

இரண்டு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தண்டனைத்
தீர்ப்பை வழங்கினார்.
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.
Name

abuse,56,accident,89,actress,3,amazing,23,article,21,astrology,135,canada,11,cinema,462,crime,50,england,9,english,2,france,5,gallery,45,health,268,india,130,others,89,poems,5,political,22,relationship,40,scitech,3,software,6,sports,40,srilanka,1786,technology,74,tips,35,videos,32,viral,11,woman,1,world,1229,
ltr
item
Jaffnabbc: யாழில் தங்கையை வல்லுறவுக்குள்ளாக்கியவனுக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை
யாழில் தங்கையை வல்லுறவுக்குள்ளாக்கியவனுக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை
https://1.bp.blogspot.com/-gPrCAbGNwHU/Woqs6hj8KJI/AAAAAAAACD4/yz72FpCfmNEjBmVsgAlcqO96AXY6YMRcgCLcBGAs/s640/download%2B%25283%2529.jpg
https://1.bp.blogspot.com/-gPrCAbGNwHU/Woqs6hj8KJI/AAAAAAAACD4/yz72FpCfmNEjBmVsgAlcqO96AXY6YMRcgCLcBGAs/s72-c/download%2B%25283%2529.jpg
Jaffnabbc
https://www.jaffnabbc.com/2018/02/blog-post_76.html
https://www.jaffnabbc.com/
https://www.jaffnabbc.com/
https://www.jaffnabbc.com/2018/02/blog-post_76.html
true
3587128704731351211
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy