Trending News...

பருத்தித்துறையில் சிக்கியது 10 கிலோ கஞ்சா!! – 5 பேர் இதுவரை கைது

பருத்தித்துறையில் தேவரையாழி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீடு ஒன்றுக்குள் அதிரடியாகப் பாய்ந்த நெல்லியடிப் பொலிஸார் 10 கிலாகிராம் கஞ்சாவை  மீட்டனர். அங்கிருந்த 5 பேரைக் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இன்று (01.03) மாலை 6 மணியளவில் நடந்துள்ளது.

பொலிஸார் வீட்டுக்குள் அதிரடியாகப் பாய்ந்தபோது அங்கு கஞ்சா பொலித்தீன் பைகளில் இருந்து கஞ்சா வேறாக்கப்பட்டுப் பொதியிடப்பட்டுக்கொண்டிருந்தது. அவை கைப்பற்றப்பட்டதுடன், அங்கிருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணை தொடர்கிறது என்று பொலிஸார்  தெரிவித்தனர்.