Trending News...

100க்கும் மேற்பட்டோர் நடிகை கஸ்தூரி வீட்டின் முன்பு போராட்டம்.

பிரபல நடிகை கஸ்தூரி அரசியல் உட்பட பல்வேறு விஷயங்கள் பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துவருகிறார். அவரது கருத்துக்கள் பல முறை சர்ச்சைகளில்சிக்கியுள்ளன.

சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த கொலை சம்பவம் பற்றி ட்விட்டரில் பதிவிட்ட அவர் ஒரு குறிப்பிட்ட ஜாதி பற்றி பேசியிருந்தார். அதற்காக அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தேனாம்பேட்டையில் உள்ள நடிகை கஸ்தூரி வீடு அருகே சமூக நீதி சத்திரிய பேரவை மாநில அமைப்பை சேர்ந்த 100கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.

கஸ்தூரிக்கு எதிராக கோஷம் எழுப்பிய அவர்களை போலீஸ் கைது செய்து அப்புறப்படுத்தினர்.