11 பெண்களை பாலியல் பலாத்காரம். குற்றவாளிக்கு மரண தண்டனை; நீதிமன்றம் அதிரடி

சீனாவில் 11 பெண்களை சித்ரவதை செய்து, பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இன்றைய நவீன உலகத்தில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பெண்கள் வேலைக்கு செல்வதற்கும், வெளியே செல்வதற்கும் பயப்படுகின்றனர்.

சீனாவைச் சேர்ந்தவன் கியா செங்யாங். இவன் அப்பாவிப் பெண்கள், குழந்தைகள் என இதுவரை 11 பேரை கற்பழித்து கொலை செய்திருக்கிறான். மேலும் இவன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் போலீஸார் சமீபத்தில் இவனை கைது செய்தனர். விசாரணையில் அவன் செய்த தவறுகளை ஒப்புக்க்கொண்டான். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவனுக்கு மரண தண்டனை விதித்து, சீன நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.