Loading... Please Wait.

16, 17 வயதுச் சிறுவர்களுடன் உல்லாசமாக இருப்பதற்காக 34 வயதுச் சிங்களத்தி செய்த வேலை இது!!

இளம் சிறுவர்களுடன் பாலியல் தொடர்பை பேணுவதற்காக கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்ட குடும்பப் பெண் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் வீட்டுப் பணிப் பெண்ணாக வீடுகளில் வேலைக்குச் சென்று அங்குள்ள பணம் நகைகளை
கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் பின்னர் அதனைக் கொண்டு இளம் ஆண்களுடன் உல்லாச வாழ்க்கை
நடத்தி வந்துள்ளதாகவும் வாக்கு மூலத்தில் பதிவு செய்துள்ளார்.

வெலிகட, ராஜகிரிய, அரனோதய மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான குறித்த பெண் ஒரு
விவாகமான குடும்பப் பெண் என்பதுடன், சட்டவிரோதமான முறையில் இரண்டு கணவர்களுடன் வாழ்ந்து
வருவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் வேலைக்கு செல்லும் வீடுகளில் கொள்ளையடித்து அந்தக் கொள்ளையின் ஊடாக
கிடைக்கும் பணத்தைக் கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் இள வயது ஆண்களுடன்
பாலியல் தொடர்பைப் பேணுவதற்காகவும் அந்த கொள்ளைப் பணத்தைச் செலவிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த ஓராண்டு காலமாக கொட்டாவ, தலங்கம, பொரலஸ்கமுவ, மிரிஹான, கட்டுநாயக்க
போன்ற பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் இந்தப் பெண், கொள்ளை நடவடிக்கைகளில்
ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
close