உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

3 லட்சம் கோடியை ஒரே வாரத்தில் இழந்த பேஸ்புக் நிறுவனம்

பேஸ்புக் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதையடுத்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் நிறுவனம் பங்கு வர்த்தகத்தில் ரூ.3 லட்சம் கோடியை இழந்து இருக்கிறார். வரும் நாட்களில் இதன் மதிப்பும் இன்னும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனம் அமெரிக்கத் அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததே ஃபேஸ்புக் பங்குகள் வீழ்ச்சியடைய காரணமாக இருந்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், கேம்பிர்ட்ஜ்  அனலிட்டிகா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அலெக்சாண்டர் நிக்ஸை சமீபத்தில் சந்தித்து வரும் 2019-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளப்போவதாக பாஜக தனது சந்தேகத்தை வெளியிட்டுள்ளது. பேஸ்புக்கில் இருந்து தகவல் திருடப்பட்டது உண்மை தான் என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஒப்புக் கொண்டது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனால் சமூக வலைதளத்தில் டெலிட் பேஸ்புக் என்ற ஹேஷ்டேக் வைரல் ஆனது. பலரும் பேஸ்புக் அப்ளிகேஷனை தங்கள் மொபைலில் இருந்து நீக்கினார்கள். இதனால் மார்க் ஜூக்கர்பெர்கின் சொத்து மதிப்பு வெகுவாக குறைந்திருக்கிறது.