உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

விடுதியில் 35 வயது பெண் அடித்துக்கொலை.

திருவள்ளூர் அருகே விடுதியில் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை தொடர்பாக விடுதி உரிமையாளர், விடுதி காவலாளி ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானியம்மன் கோயில் அருகே தனியார் விடுதி ஒன்றில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. கோயிலுக்கு வந்த பெண் நகைக்காக கடத்திக் கொல்லப்பட்டாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியபாளையம் காவல்துறையினர், விடுதியின் உரிமையாளர் பாண்டியன், விடுதி காப்பாளர் பாபு ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம், உடற்கூறு ஆய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.