Trending News...

முல்லைத்தீவு ஆழ்கடலை நோக்கிச் சென்ற இராட்சத பறவை! அனர்த்தத்தின் அறிகுறியா?

முல்லைத்தீவு ஆழ்கடல் நோக்கி இராட்சத பறவை ஒன்று பறந்து சென்றுள்ளதாகவும், இது ஆபத்தின் அறிகுறியாக பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடற்கரையில் இருந்து 600 மீற்றர் தொலைவில் தென்பட்ட இந்த இராட்சத பறவை வட – கிழக்கு கடல் நேராக ஆழ்கடல் நோக்கி பறந்து சென்று மறைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் முல்லைத்தீவு பெருங்கடலில் ஏற்பட்ட பல்வேறு பாதகமான காலநிலை மாற்றங்களினால் மீனவர்களின் தொழில் மிகவும் பாதிப்படைந்திருந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் பறந்து சென்ற இந்த இராட்சத பறவை தொடர்பில் மீனவர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் நிலவிவருகின்றது.

முல்லைத்தீவு பெருங்கடலில் ஏற்படும் பாதகமான மாற்றங்கள் நீங்கி கடல் நிலை சீராக வேண்டும் என்றும் மீனவர்களின் தொழில் மேம்படவேண்டும் என்றும் அண்மையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடற்கரையில் ஒன்று கூடி வழிபாடு ஒன்றினை செய்திருந்தனர். இந்த நிலையில் முல்லைத்தீவு பெருங்கடல் மீனவர்களின் தொழிலில் தற்பொழுது பாதிப்புக்கள் குறைவடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பறவை தொடர்பில் முல்லைத்தீவு மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர் என்பதுடன் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி வருவதற்கு முன்பும் இவ்வாறு ஒரு பறவை கடலைக் கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.