உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

முருங்கை மரத்தில் குரங்கு போல் மாறிய பிந்துமாதவி!

கேடி பில்லா,வருத்தபடாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் பிந்து மாதவி.பிக்பாஸ் நிகிழச்சியிலும் பாதியில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடதக்கது.

இவர் சமீபகாலமாக இன்ஸ்ட்ராகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் தினமும் தனது செல்பி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில் குரங்கு மரத்தின் மீது ஏறுவது போல் ஏறி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

விக்ரமாதித்யன் கதைகளில் வரும் வேதாளம் போல முருங்கை மரத்தின் மேல் ஏறி நின்று போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் நெட்டிசன்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

பிந்துமாதவி ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவர் மரத்தின் மீது ஏறி நிற்பது தெரிகிறது. அது என்ன மரம் அவர் அங்கு என்ன செய்கிறார் என முதலில் புரியவில்லை. பிறகு அந்த ட்விட்டர் கருத்தை பார்த்த போது தான் விவரம் தெரிந்தது. பிந்து அவங்க அம்மாவிடம் முருங்கைக்காய் சாம்பார் கேட்டுள்ளார். அம்மாவும் போய் மரத்துல இருந்து பறித்து வரச் சொன்னாராம். அதனால அம்மணி மரத்துல ஏறி முருங்கக்காய் பறித்துள்ளார். சரி இத சும்மா பறிக்கிறதான்னு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். எடுத்த போட்டாவை என்ன செய்வது என்று  ட்விட்டரில் பதிவுவிட்டுள்ளார். இதற்கு தான் பிந்துவின் ரசிகர்கள் கமண்ட்டுகளை போட்டு தாக்கி வருகின்றனர்.