உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

கடலுக்கடியில் அசத்தல் உணவகம்...

நார்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று கடலுக்கடியில் உணவகம் அமைக்க திட்டமிட்டுள்ளது.

பொதுவாக அனைவருக்கும் பிடித்த ஒன்று கடற்கரை உணவங்கள். நார்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று கடலுக்கடியில் உணவகம் அமைக்க திட்டமிட்டுள்ளது.

கடலுக்கு அடியில் 5 மீட்டர் ஆழத்தில் இந்த உணவகம் அமைந்திருக்கும். அடுத்த ஆண்டு இந்த உணவகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 100 வரை அமர்ந்து உணவருந்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகத்தில் கடல் உணவுகளுக்கே முக்கியம் அளிக்கப்படும் என்றும், மதுக்காக தனி அரங்கம் அமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.