உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் பலி

சூரங்கல் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் டிப்பர் விபத்தில் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் மரணமடைந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (19) இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கிள் சென்ற இளைஞர்கள் டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவத்தில் படுகாயங்களுடன் திருகோணமலை வைத்திய சாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதூர் நடுத்தீவு பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட எம். சம்ரின் என்பவர் இன்று (25) மரணமடைந்தார்.

குறித்த விபத்தில் தௌபீக் உமைசுல் கர்னி என்பவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்து சாம்பராகியதுடன் டிப்பர் வண்டியும் பகுதியளவில் எரிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.