Trending News...

காங்கேசந்துறையில் கடை மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் காங்கேசந்துறை பிரதான வீதி அமைந்துள்ள முட்டாசுக்கடை சந்தியில் ஜிப்சம் விற்பனை செய்யும் கடை மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (25) மாலை 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த கடை மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மற்றும் கற்களை வீசிச் சென்றுள்ளனர்.

இதனால் குறித்த கடையின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளதுடன் கடைபெற்றோல் குண்டு வெடித்தனால் சிறிதளவு சேதமடைந்துள்ளது.

தனிப்பட்ட பகையே இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரிவித்த யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.