உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

இலங்கை கடற்கரையில் காதல் ஜோடிக்கு ஏற்பட்ட விபரீதம்!

ஹூங்கம – உசன்கொட தேசிய பூங்காவை பார்வையிட சென்ற காதல் ஜோடி தாக்கப்பட்டு, தங்க மாலை மற்றும் கைபேசி கொள்ளையடிக்கப்பட்டதாக ஹூங்கம காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உசன்கொட கடற்கரை அருகாமையிற்கு சென்ற போது, குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொள்ளையடித்த மூன்று பேர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய, சந்தேக நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதனை தொடர்ந்து, மற்றைய இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளையடிப்பதற்கு சந்தேக நபர்கள் பயன்டுத்தியுள்ள உந்துருளியும் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் அகுனகொலபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.