Trending News...

டிப்பருடன் மோதிய மோட்டார் சைக்கிள். மூவர் படுகாயம்.

செங்கலடி - பதுளை வீதி, கொடுவாமடு பகுதியில் நேற்று  (02) இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, கரடியனாறு பொலிஸார் தெரித்தனர்.

பன்குடாவெளியிலிருந்து, செங்கலடி நோக்கி வந்த மோட்டார் சைக்கிள்,காயன்குடாவிலிருந்து செங்கலடி நோக்கி பயணித்த துவிச்சகரவண்டியின் பின்புறத்தில் மோதி,வேகக் கட்டுபாட்டை இழந்த நிலையில் எதிர்த் திசையிலிருந்து வந்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.



விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பன்குடாவெளி குளனியைச் சேர்ந்த க.கணேஸ்வரன் (வயது 23), எஸ்.சிந்துஜன் (வயது 24), துவிச்சக்கர வண்டியில் பயணித்த அ.அரசரெத்தினம் (வயது 54) ஆகியோர் காயமடைந்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிற்சைகளுக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.