பாலியல் குற்றவாளிகளை நடுரோட்டில் செருப்பால் அடித்த பெண்கள்

மத்தியபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் ஐஏஎஸ் தேர்வு எழுத பயிற்சி எடுத்து வந்த 19 வயது இளம்பெண்ணை நான்கு வாலிபர்கள் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் காவல்துறையினர்களின் தனிப்படை நான்கு குற்றவாளிகளையும் கைது செய்தது. கைது செய்த நால்வரையும் சாலை வழியே காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மற்றும் தோழிகள் குற்றவாளிகளை செருப்பால் அடித்தனர். இந்த குற்றவாளிகளை கைது செய்த பெண் காவலர் ஒருவரும் அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் கம்பை குற்றவாளி ஒருவரிடம் கொடுத்து அவர்களையே மாறி மாறி அடித்து கொள்ளும்படி கூறினார். பின்னர் போலீசார் அவர்களிடம் இருந்து குற்றவாளிகளை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.