Trending News...

இத்தனை ஆயிரம் கோடியா? பிளாக் பாந்தர் படத்தின் பிரமிக்க வைக்கும் வசூல்!

ஹாலிவுட்டில் தயாரிக்கப்படும் சூப்பர்ஹீரோ படங்கள் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வசூல் ஈட்டுவது புதிதல்ல. சமீபத்தில் வெளிவந்த பிளாக் பாந்தர் படமும் விதிவிலக்கல்ல.

இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி 26 நாட்களில் தற்போது $1 பில்லியன் வசூலித்துள்ளது. அது இந்திய ரூபாயில் 6500 கோடி ரூபாய்க்கும் அதிகம்.

$1 பில்லியன் மைல்கல்லை தொட்டுள்ள 33வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. டிஸ்னி இந்த சாதனையை தொடுவது 16வது முறையாகும். மார்வெல் 1 பில்லியன் டாலர் வசூலை 5வது முறையாக தொட்டுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் $521 மில்லியன் வசூலித்துள்ள பிளாக் பாந்தர் தான் தற்போது ஆல்டைம் வசூலில் 9வது இடத்தில உள்ளது.